திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் 50வது வார்டில் பாலாஜி நகர் மூன்றாவது வீதியில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா விளையாட்டு பூங்காவை திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ் குமார் பார்வையிட்டார்.
உடனடியாக அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்ட சேதம் அடைந்த நிலையில் காணப்பட்ட பூங்காவை சுத்தம் செய்து சீரமைக்க உத்தரவிட்டார் அதிகாரிகள் ஊழியர்களுடன் பூங்காவிற்கு வந்து சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்கள் மேலும் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து பூங்காக்களும் கண்டறியப்பட்டு பூங்காக்களை சுத்தம் செய்து மேம்படுத்தி அனைத்து வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மரியாதைக்குரிய மேயர் என்.தினேஷ்குமார் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் 50 வார்டு மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நசீர்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி சாகுல் திமுக நிர்வாகிகள் அர்ஜுன் ராஜகோபால் டைலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment