தாராபுரம் அருகே அம்மன் சிலையில் இருந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார் இந்த நிலையில் அலங்கியம் சாலையில் சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த விசாரணையில் அவர் தாராபுரம் அருகே உள்ள பெரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் மணி என்பதும் ஆச்சியூர்புதூரில் உள்ள உச்சி மாகாளியம்மன் சாமி கழுத்தில் இருந்த நகையை திருடியதாக ஒப்புக்கொண்டார் இதை எடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


No comments:
Post a Comment