இதைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ18.19 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், பயனாளிகளுக்கு ரூ 92.400 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், ரூ 42,736 மதிப்பீட்டில் 8 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளும், ரூ51,750 மதிப்பீட்டில் 16 பயனாளிகளான உலமாக்கள் இதர பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு மிதிவண்டிகளும் ஒரு பயனாளிக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பிலான இரண்டு சக்கர மானிய தொகையும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 9,54000 மதிப்பிலான பேட்டரி வீல்சேல்களையும் பார்வை, செவி குறைபாடு உள்ள 5 பேருக்கு ரூ 67,745 மதிப்பீட்டில் கைபேசிகளும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஏழு பயனாளிகளுக்கு 30 சதவீத மானியத்துடன் தொழில் கடன் உதவிகள் என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ18,19855 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சிகளின் போது திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ,சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் ,திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல குழு தலைவர் இல. பத்மநாபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment