திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட அவிநாசி பேரூர் சந்தை கடை வளாகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு முகாமில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் வருகை தந்து மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் வினித் ஐஏஎஸ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்து அங்கு வாழும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்குண்டான தீர்வுகளை ஏற்படுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
முன்னதாக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி திமுகழக சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய க. செல்வராஜ் வழிகாட்டுதலின் பேரில் அவிநாசி பேரூர் கழக செயலாளர் திராவிடன் வ.வசந்தகுமார் ஏற்பாட்டில் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அமைச்சர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
No comments:
Post a Comment