மூலனூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1. கோடி கடன் தள்ளுபடி சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 January 2023

மூலனூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1. கோடி கடன் தள்ளுபடி சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.


திருப்பூர் மாவட்டம், மூலனூர் வட்டாரத்துக்குட்பட்ட, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ. 1. 01 கோடி கடன் தள்ளுபடிக்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். வினித் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சுய உதவிக் குழு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்று வழங்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சி. சி 1)த் துறை அரசாணை வெளியிட்டன.


இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடன் தள்ளுபடி பெறுபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதனை துறை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகங்கள் கொண்ட குழு சரிபார்க்கப்பட்டு தகுதியான பட்டியலை தயார் செய்தனர்.


இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 1323 சுய உதவிக் குழுக்களுக்கு 12363 நபர்களுக்கு ரூ. 17. 92 கோடி வட்டி ரூபாய் 2.41 கோடி ஆக மொத்தம் ரூபாய் 20.34 கோடி அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


அதன் அடிப்படையில் இன்று மூலனூர் வட்டாரத்தில் உள்ள 9 கூட்டுறவு நிறுவனங்களில் 63 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூபாய் 1. 01 கோடிக்கான கடந்த 03.12. 2021ல் படி அரசு தள்ளுபடி செய்து அரசு ஆணை வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூலனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 63 மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள மொத்தம் 538 பயனாளிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இலா. பத்மநாதன், துணைப் பதிவாளர் தாராபுரம் சரகம் மணி, மூலனூர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு B.Sc..,

No comments:

Post a Comment

Post Top Ad