திருப்பூரில் SDPI கட்சியின் கொங்கு மண்டல மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா!. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 January 2023

திருப்பூரில் SDPI கட்சியின் கொங்கு மண்டல மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா!.


திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் தொகுதியில்  இன்று 08/01/2023 ஞாயிற்றுக்கிழமை  மாலை 05.00.மணி அளவில் வருகின்ற 22ஆம் தேதி திருப்பூரில்  நடைபெற உள்ள SDPI கட்சியின் கொங்கு மண்டல மாநாட்டை முன்னிட்டு கொங்கு மண்டல மாநாடு அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை M. யாசர் அராபத் பல்லடம் தொகுதி தலைவர் வரவேற்புரை வழங்கினார், M. முஹம்மது ஆசாத் தொகுதி செயலாளர் முன்னிலை வகித்தார், I.மன்சூர் அஹமது கான் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர், J.சையது அபுதாஹிர் DME திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் M. முஜிபுர் ரஹ்மான் திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

M.ஹாரிஸ் பாபு  திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் M.நிஜாம்   முகைதீன் மாநில பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு கொங்கு மண்டல மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். நன்றியுரை J. நாசர் நிகழ்த்தினார், இந்நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் உறுப்பினர்கள்  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad