குண்டடம் அருகே வாய்பேச முடியாத பெண்மீட்பு - போலீஸ் விசாரணை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 January 2023

குண்டடம் அருகே வாய்பேச முடியாத பெண்மீட்பு - போலீஸ் விசாரணை.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே, வாய் பேச முடியாத நிலையில் இருந்த பெண்ணை மீட்ட போலீசார் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டடம் அருகேயுள்ள பனப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி இவரது தோட்டத்தில் 55வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவர் யார் என விசாரிக்க முயன்றார். ஆனால் அந்த பெண்ணால் எதுவும் பேச முடியவில்லை. இதுபற்றி குண்டடம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 


போலீஸ் எஸ்ஐ பிரதாப், மண்டோதரி மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டனர். தொடர்ந்து திருப்பூர் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவரை சிகிக்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின்னர் திருப்பூரிலுள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 


இந்த பெண் யார்?, எந்த ஊர் என்பது பற்றிய விபரங்கள் தெரியவில்லை. தகவலறிந்தோர் குண்டடம் போலீசை தொடர்புக்கொள்ளலாம் என்றனர்.



- தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு B.Sc..,

No comments:

Post a Comment

Post Top Ad