தாராபுரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தேசிய செயலாளர் அகில இந்திய துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சுப்பராயன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த தொழிலாளர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் திரண்டனர்.
மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் பேரணியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அமராவதி ரவுண்டானா சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

ஏ. ஐ. டி. யூ. சி. விவசாய தொழில் சங்க மாவட்ட தலைவர் பி. ரகுபதி,தாலுகா செயலாளர் லட்சுமணன், தாலுகா துணை செயலாளர் ரவி,ஒன்றிய செயலாளர் மலையாண்டி உட்பட மறியலில் ஈடுபட்ட 1200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழகு நாச்சியம்மன் மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். இந்த மறியல் போராட்டத்தால் கோவை ஈரோடு திருப்பூர் முன்னிட்ட பகுதிகளில் இருந்து வந்த பேருந்து மற்றும் நான்கு சக்கர இருசக்கர வாகனங்களை மாற்றுப் பாதையில் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் 50 மகளிர் போலீஸார்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.
- தாராபுரம் தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு.,B.Sc.,
.jpg)
No comments:
Post a Comment