திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 14வது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் புதிய குடிநீர் இணைப்பு திட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் அதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாமல் பெரிய பெரிய கற்கள் ரோட்டின் மத்தியில் கிடப்பது பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதை ஒட்டி திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் அவர்கள் ஆய்வு செய்தார்.
அப்போது 14 ஆவது வார்டு திமுக கழக செயலாளர் மு ரத்தினசாமி அவர்களும் பாத்திர தொழிற்சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி அவர்களும் 15 வேலம்பாளையம் பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன் அவர்களும் உடனிருந்தனர் மண்டல தலைவர் சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளிடம் உடனடியாக இந்த தெருக்களில் உள்ள பெரிய கற்களை அப்புறப்படுத்தி விட்டு சரியான முறையில் சமப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.


No comments:
Post a Comment