திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய காலி இட வரி சொத்து வரி குடிநீர் கட்டணம் பாதாள சாக்கடை கட்டணம், தொழில்வரி, போன்ற அனைத்து இனங்களுக்கும். செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.
அதிக நிலுவை வைத்துள்ள முதல் 100 நபர்களின் பட்டியல் வருகின்ற 9-01- 2023 அன்று இரண்டாவது 100 நபர்களின் பட்டியல் 11 1.2023 அன்று மூன்றாவது நபர்களின் பட்டியல் 13, 1, 2023 அன்று நகராட்சி இணையதளத்திலும் நகராட்சி அலுவலக அறிவிப்பு பலகை மற்றும் பேருந்து நிலையத்திலும் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

p style="text-align: justify;">ஆகையால் நிலுவை வைத்துள்ள அனைவரும் தொகை செலுத்தும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களிலும் மையங்களில் செயல்படும், மேலும் www.tnurbanepay.tn.gov.in இணையதளம் வாயிலாகவும் என்ற இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தவிர்க்கும் பட்சத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
- தமிழக குரல் உடுமலை செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்

No comments:
Post a Comment