மடத்துக்குளம் அருகே கோர விபத்து 3 பேர் பலி. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 January 2023

மடத்துக்குளம் அருகே கோர விபத்து 3 பேர் பலி.

உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் மை வாடி பிரிவு என்ற இடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் மூவர் பலி உடுமலையிலிருந்து பழனி நோக்கி  பைக்கில் சென்ற சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் 31 திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்த கதிரேசன் 22  எதிரே உடுமலை நோக்கி பைக்கில் வந்த போளரைப் பட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன் 35 ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் இருந்தனர். இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்  பிரேத  பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


- உடுமலை தமிழர் குரல் செய்திகளுக்காக  ஜெ. வைர பிரகாஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad