திருமூர்த்தி மலையில் அடாவடி வசூல்,சுற்றுலா பயணிகள் புகார்!!. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 January 2023

திருமூர்த்தி மலையில் அடாவடி வசூல்,சுற்றுலா பயணிகள் புகார்!!.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி  திருமூர்த்தி அணை வண்ண மீன் காட்சியகம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும்  அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில்  உள்ளது.

சுற்று வட்டார பகுதியில் இருந்து  அதிகமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்,  இந்த நிலையில் விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்  இதை பயன்படுத்திக் கொண்டு கூடுதலாக  கட்டணமாக ரூபாய் 30 வரை வசூலிக்கப்பட்டு வருகின்றது இதற்கிடையில் உடுமலையிலிருந்து ஆட்டோவில் பொதுமக்களை   ஏற்றி  சென்றாலும் ஆட்டோவிற்கு நுழைவுக் கட்டும் கட்ட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். 


மேலும் இது குறித்து பக்தர்கள் சுற்றுலா பயணிகள் கேட்டால் அடாவடித்தனமாக பதில் கூறுகின்றனர். இதற்கு கடும் கண்டனம் விழுந்துள்ளது ஆகையால் குறைந்த கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், என சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வசூல் செய்யும் நபரும் டிக்கெட் ரசீதும் சமூக வலைதளங்களில் வைரலாய்  பரவி  வருகின்றன.


- உடுமலை தமிழர் குரல் செய்திகளுக்காக  ஜெ. வைர பிரகாஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad