திருப்பூர் மதிமுக சார்பில் 5000 பெண்கள் கலந்து கொள்ளும் சமத்துவ பொங்கல் விழா மதிமுக நாகராஜ் அறிவிப்பு ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 January 2023

திருப்பூர் மதிமுக சார்பில் 5000 பெண்கள் கலந்து கொள்ளும் சமத்துவ பொங்கல் விழா மதிமுக நாகராஜ் அறிவிப்பு !


திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் 24வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆகிய மதிமுக ஆர்.நாகராஜ் கூறியுள்ளதாவது திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக - திலீபன் மன்றம் சார்பில் 16/1/2023 அன்று காலை 8 மணிக்கு மும்மத்தை சேர்ந்த இந்து, முஸ்லிம் ,கிறிஸ்துவ, பெண்கள் 5000 பேர் பங்கேற்கும் 25ம் ஆண்டு மாபெரும் சமத்துவ பொங்கல் விழா மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தலைமையில் திருப்பூர் சாமுண்டிபுரம் நாகாத்தாள் கோவில் அருகில் நடைபெற உள்ளது, இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு 15 ம் தேதி  மதியம் 12 மணி அளவில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் ஈபி காலனியில் உள்ள மதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வழங்கப்படும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்திற்கு நேரில் வந்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்  இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad