திருப்பூர் மாவட்டம் அவினாசி கோட்டம் அனுப்பர்பாளையம் பிரிவு மின்சார அலுவலகம் சார்பாக ஆத்துப்பாளையம் ரோடு இரண்டாம் நம்பர் ரேஷன் கடை அருகில் ஆதார் இணைப்பு முகாம் நடைபெற்றது, இந்த முகாமில் இதுவரை மின் அட்டையுடன் ஆதார் எண் இணைக்காத பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை மின் அட்டையுடன் இணைத்துக் கொண்டனர் இந்த முகாமை அனுப்பர்பாளையம் பிரிவு அலுவலகம் சார்ந்த அதிகாரிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

உடனடியாக பொதுமக்களின் மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொடுத்தனர் இந்த முகாம் பற்றி பொதுமக்கள் தமிழக அரசின் ஆதார் இணைப்பு முகாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் மின்சார அலுவலகத்திற்கு சென்று அலைய வேண்டிய சிரமம் இல்லாமல் இருக்கிறது மேலும் இந்த முகாம்கள் மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.

No comments:
Post a Comment