திருப்பூரில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி யை திரும்ப பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அவரை திரும்ப பெற கோரி மத்திய அரசை வலியுறுத்தியும். திருப்பூர் ஆதித்தமிழர் பேரவையின் வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் மணி அவர்கள் தலைமையில் அவினாசி புதிய பேருந்து நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் சோழன், மாநில துணை செயலாளர், ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை சாவித்திரி, மாநில துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப அணி பிரபாகரன், மாநில துணை செயலாளர், தகவல் தொழில் நுட்ப அணி அவினாசி க.மணி, வடக்கு மாவட்ட செயலாளர் ஜானகி, வடக்கு மாவட்ட துணை செயலாளர் தமிழ்மாறன், மத்திய மாவட்ட செயலாளர் கவியரசி, மத்திய மாவட்ட நிதி செயலாளர் சின்னச்சாமி, மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், மத்திய மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் மோகன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரெங்கசாமி, அவினாசி ஒன்றிய செயலாளர் சி.கா. சிவகுமார், திருப்பூர் மாநகர பொறுப்பாளர் எம்.பி.ஆறுமுகம், மாநில தலைவர் சமூக விடுதலை கட்சி கார்த்திக், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம் ஆனந்தன், திருப்பூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்துகொண்டனர், கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

No comments:
Post a Comment