திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் கடந்த சில தினங்களாக சைக்கிள் தொடர்ந்து திருடு போய் வந்த நிலையில் உடுமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர் . இந்த நிலையில் இன்று அதிகாலையில் வழக்கம் போல் மைதானத்தில் செயல் திருட வந்த போடி பட்டி அண்ணாநகரை சேர்ந்த ஒருவரை பிடித்து உடுமலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- தமிழக குரல் உடுமலை செய்திக்காக ஜெ. வைர பிரகாஷ்.


No comments:
Post a Comment