நெகிழி பயன்பாட்டை ஒழிக்க முடியவில்லை தமிழக அரசின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

நெகிழி பயன்பாட்டை ஒழிக்க முடியவில்லை தமிழக அரசின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்.


மடத்துக்குளம் வட்டாரத்தில் அதிகரிக்கும் நெகிழி பயன்பாடு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் சமீப காலமாக நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது.

சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் துணிபையை உபயோகிக்குமாறு  அறிவுரித்திய போது பொதுமக்கள் துணிப்பைகளையே மளிகை கடை முதல் அனைத்து கடைகளுக்கும் பொருட்கள் வாங்க துணிப்பைகளை தாங்களே கொண்டு சென்ற நிலைமை இருந்தது அது சிறிது காலமே நீடித்தது மீண்டும் நெகிழி புழக்கத்திற்கு வந்ததின் காரணமாக நெகிழி பயன்பாடு பொதுமக்கள் இடையே அதிகரிக்க ஆரம்பித்து விட்டது இது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காண்பிக்கிறது.

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் நெகிழி விற்கும் மொத்த விலை கடைகளில் தொடர்ந்து சோதனை இடுவது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் தமிழக முதல்வரின் வேண்டுகோளின் படி துணி பையை பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக நெகிழியை ஒழித்திட வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad