
இவ்வாறு பாத யாத்திரையாக தர்மபுரி சேலம் ஈரோடு நாமக்கல் கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் பாத யாத்திரையாக காங்கேயம் வழியாக செல்வது வழக்கம் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட காவடி சுமந்து முருகன் சிலைகளுடன் பாடல்கள் பாடி பாத யாத்திரையாக கடந்த மூன்று நாட்களாக அதிக அளவில் செல்கின்றனர் திருப்பூர் நத்தக்கடையூர் முதல் தாராபுரம் வரை உள்ள சாலையில் சாரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவளிக்க சாலை ஓரங்களில் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு அன்னதான கூடத்தை அந்தந்த பகுதி முருக பக்தர்கள் தன் ஆர்வலர்கள் அமைத்துள்ளனர்.
இதில் மூன்று நாட்களுக்கும் தொடர்ந்து காலை மதியம் இரவு என உணவளித்து வருகின்றனர் இதனால் இந்த சாலை அன்னதான சாலையாகவே காட்சி தருகின்றது காங்கேயத்தை கடந்து செல்லும் முருக பக்தர்கள் அன்னதானம் வழங்கியவர்களை மனதார வாழ்த்துகின்றனர்.

No comments:
Post a Comment