திருப்பூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் நினைவு நாளையொட்டி தியாகி திருப்பூர் குமரன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் மேயருமான விசாலாட்சி தலைமை தாங்கினார்.

அவைதலைவர் பாலுசாமி முன்னிலை வகித்தார், இதையொட்டி திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் குமரன் நினைவிடத்தில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிங் சிறுபான்மை பிரிவு ஜான், பொதுக்குழு உறுப்பினர் புல்லட் ரவி மாவட்ட துணைச் செயலாளர்கள் கீதா, சூர்யா செந்தில், பகுதிசெயலாளர்கள் சுகம் வீர, கந்தசாமி, நல்லூர் ஜெகதீஷ், சிவக்குமார் ராஜாங்கம் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இறை வெங்கடேஷ் தொழிற்சங்க பேரவை பாலகிருஷ்ணன் கலியமூர்த்தி அம்மா பேரவை ரத்தினசாமி கருப்புசாமி உள்ளிட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment