திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகின்றது, இந்த நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பூசி முகாம் கொங்கல் நகரத்தில் நடந்தது.
தடுப்பூசி முகாமில் கொங்கல் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர் பத்மா ஸ்ரீ தலைமையிலான குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
No comments:
Post a Comment