திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தூவானம் அருவி தமிழக எல்லைப் பகுதியில் உள்ளது கடந்த 31ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட அம்பத்தூர் பகுதியில் இருந்து 41 பேர் தூவானம் அருவிக்கு புத்தாண்டு முன்னிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அறிவியல் குளித்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அம்பத்தூர் புது தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் விஷால்( 27 ) ஆற்றில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கினார் அப்போது உடன் இருந்த நண்பர்கள் காப்பாற்றும் முயன்ற போது விஷால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்த நிலையில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தண்ணீரில் அடுத்து செல்லப்பட்ட விஷாலின் உடல் தற்போது வரை கிடைக்கவில்லை.
மூன்றாவது நாளாக இன்று காலையில் மீண்டும் வனத்துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் புத்தாண்டை கொண்டாட வந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்.
No comments:
Post a Comment