உடுமலை பிஏபி வாய்க்கால் அருகே பச்சிளங்குழந்தை சடலம் மீட்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 January 2023

உடுமலை பிஏபி வாய்க்கால் அருகே பச்சிளங்குழந்தை சடலம் மீட்பு.


திருப்பூர் மாவட்டம் உடுமலை  உட்கோட்டம் தலி  காவல் சரகம் எல்லைக்கு உட்பட்ட  எரிசனம்பட்டி அருகே பிரிந்து  செல்கின்ற  தீபா லப்பட்டி அர்த்தனாரி பாளையம்  பிஏபி வாய்க்காலில் பிறந்த ஒரே நாளில் ஆன  தொப்புள் கொடியுடன்  ஆண் குழந்தையின் சடலம் இருந்தது இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும்  தலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பெயரில் போலீசார் தலி போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை எடுத்து குழந்தையின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்றவர் யார்?  தாய் தந்தை யார்?, என்பது குறித்து காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து கொண்டுள்ளனர், பிறந்து ஒரே நாளை ஆன குழந்தை இறந்த மீட்கப்பட்ட சம்பவம்   குறித்து  அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

- உடுமலை செய்தியாளர் ஜெ. வைர பிரகாஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad