ஈரோடு - பழனி செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் மற்றும் பேருந்து ஓட்டுனராக மனோகரன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஈரோட்டில் இருந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரிய கடைவீதி வழியாக புது காவல் நிலைய வீதியில் வந்து கொண்டிருந்தது அப்போது நடத்துநர் யுவராஜ் முன் படிக்கட்டில் நின்று கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது காவல் நிலையம் எதிரே பேருந்து சென்று கொண்டிருந்தபோது வளைவில் திரும்பும்போது திடீரென பஸ் முன்பக்க கதவு திறந்து கொண்டது இதனால் முன் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த யுவராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார் நடத்துநர் விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் சத்தமிட்டனர் இதனைக் கேட்டு உடனே ஓட்டுனர் மனோகர் பேருந்தை நிறுத்தினார்.
பலத்த சத்தத்துடன் சாலையில் உருண்டோடிய நடத்துநர் யுவராஜை பேருந்தில் பயணம் செய்த பொன்னையன் என்பவர் அவரை தூக்கி ஆட்டோவில் வைத்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு யுவராஜ்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பேருந்தில் இருந்து நடத்துனர் தவறி விழுந்தது பயணிகள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தாராபுரம் தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு.

No comments:
Post a Comment