தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் காவலர் குடியிருப்பில் காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் தொடர்ந்து நடைபெற்ற காவலர்களின் குழந்தைகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகள் சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அனில்குமார், அனுப்பர்பாளையம் பகுதி உதவி ஆணையர் நல்லசிவம், நல்லூர் பகுதி உதவி ஆணையர் நந்தினி, நுண்ணறிவு பிரிவின் உதவி ஆணையர் ஈஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் ஏராளமான கலந்து கொண்டனர்.


.jpg)
No comments:
Post a Comment