திருப்பூர் மாவட்டம் உடுமலை தேஜஸ் மஹால் (நகராட்சி திருமண மண்டபம்) ஹெச்டிஎஃப்சி வங்கியின் சார்பில் கிராமிய திருவிழா நடைபெற்றது. விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உயர் திரு சண்முகசுந்தரம் உடுமலை நகராட்சி தலைவர், மத்தியன வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் வங்கியின் உயர் அலுவலர்கள், உழவர் பெருமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளிலும் அரசின் மூலம் நடை முறைப்படுத்தப்படும் திட்டங்கள் அதற்கு வங்கியும் செய்யும் கடன் மற்றும் நிதி உதவிகள் பற்றி விளக்கப்பட்டது. இந்த கிராமிய திருவிழா பல்வேறு தரப்பினரும் அரசின் திட்டங்கள் மற்றும் வங்கி சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள உதவிகரமாக இருந்தது.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக. ஜெ. வைர பிரகாஷ்

No comments:
Post a Comment