திருப்பூர் மாவட்டத்தில் வட இந்திய தொழிலாளர்கள் வன்முறை திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வட இந்திய தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் துரத்தியதால் பரபரப்பு பயத்தில் அந்தப் பகுதி பெண்கள் பனியன் நிறுவனத்தில் சிகரெட் புகைக்கும் போது தொழிலாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தமிழக தொழிலாளர் ஒருவரை பெல்ட், கட்டைகள், கற்கள் கொண்டு தாக்க வட மாநில தொழிலாளர்கள் துரத்தும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியானதையொட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகம் எங்கும் வட மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் பணியில் இல்லாத இடமே இல்லை என்ற நிலையில் இவர்களுக்கு குடிநீர் ரேஷன் அரிசி வாடகை வீடுகள் தடையில்லாமல் கிடைப்பது இவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது ஆனால் தமிழ்நாட்டு மக்களை கும்பலாக வட மாநில தொழிலாளர்கள் தாக்குவது நாளுக்கு நாள் ஆங்காங்கே நடைபெறுகின்றது இது மிகவும் ஆபத்தான போக்காகும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment