முகாமை தாராபுரம் நகராட்சி தலைவர் கு. பாப்புகண்ணன் தொடங்கி வைத்தார். முகாமில் இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த கண் மருத்துவ குழுவின் பார்த்த சாரதி, சேகர், காளிமுத்து ஆகியோர் முகாமில் கண் பரிசோ தனை, ரத்த பரிசோதனை, கண் ரத்த அழுத்த பரிசோதனை, மாலைக்கண், கண்ணில் சதை வளர்ச்சி, கண்ணில் சீழ் வடிதல், கண் குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொது மக்களுக்கு பரிசோதனை செய்தனர்.

மொத்த 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கி அவர்களை உயர்சிகிச்சைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி 8-வது வார்டு உறுப்பினர் கல்பனா, 9-வது வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி, வார்டு செயலாளர் மயில் சாமி, அ. தி.மு. க. வார்டு செயலாளர் வழக்கறிஞர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தாராபுரம் தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு..B.Sc.

No comments:
Post a Comment