திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் 14வது வார்டு பிரசாத் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள 12 அடி அகலம் உள்ள குறுகிய ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் திறப்பான் பல வருடங்களாக தரை மட்டத்தில் குழியாக இருந்தது.
அதில் கழிவு நீர் தேங்குவதால் குடிநீருடன் அது கலந்து வருவது பற்றியும் இந்த குடிநீர் திறப்பான் பாதுகாப்பு உள்ளதாக மாற்றக்கோரி பல வருடங்களாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசிடமும் கோரிக்கை வைத்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது புதிய ஆட்சியில் சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி மேயர் மற்றும் முதல்வர் புகார் மையத்திற்கும் சமூக ஆர்வலர் புகார் செய்து அதன் பயனாக குடிநீர் திறப்பான் பெரிய பிளாஸ்டிக் பைப்பில் பாதுகாக்கப்பட்டு அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் இந்த 12 அடி சந்துக்குள் கனரக பெரிய லாரி உள்ளே வந்து நிறுத்துவதால் இந்த பைப்பின் மீது ஏற்றி விடுகின்றனர் இந்த சிறிய சந்துக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment