திருப்பூர் மாநகராட்சி மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ்குமார் அவர்கள் 49-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரு சக்கர வாகனப் பயணம் மேற்கொண்டு கழிவுநீர் வடிகால்கள், சாலைகள் சீரமைப்பு குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார் மேலும் மேயர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வார்டுகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தது பொதுமக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.
சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள பூங்காவை பார்வையிட்டு, பூங்காவை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன இந்த ஆய்வில் மண்டல தலைவர் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment