திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த ஆட்கொண்டம்மாள் கோவில் அமைந்துள்ளது கால்நடை வளம் பெருகும் அவற்றின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும் இக்கோயிலில் பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்துகின்றனர், திருமால் எழுந்தருளியுள்ள இந்த கோயிலில் சுயம்புவாக உருவான லிங்க வடிவ புற்றுக்கு மாடுகள் தானாக பால் சொரிந்தது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளதாக சுற்றுப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொங்கலை ஒட்டி கோவிலில் நடக்கும் தை திருவிழாவுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் அருகிலுள்ள காடுகளில் மேய்ந்து வந்த பசுக்கள் புற்றுக்கு சிவனும் திருமாலும் அருகே அமையப்பெற்று, ஆல் கொண்டமாளுக்கு விவசாயிகள் பால், வெண்ணெய், உள்ளிட்ட பொருள்கள் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இங்கே வழிபட்டு செல்வதால் கால்நடைகள் நோயின்றி, சிறப்பாக ஆரோக்கியத்துடன் இருப்பதாக விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்

No comments:
Post a Comment