வட மாநில தொழிலாளர்களை கண்டித்து முற்றுகை போராட்டம் !!. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 January 2023

வட மாநில தொழிலாளர்களை கண்டித்து முற்றுகை போராட்டம் !!.


உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றிய தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவையை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டம், நடத்தினர்.  வட மாநில தொழிலாளர்களின் படையெடுப்பால் பாதிக்கப்படும், லட்சக்கணக்கான நமது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்  என  தேங்காய், எண்ணெய்  தொழிலாளர்கள் வேண்டுகோள்  அதே போல் தென்னை  தொழிலாளர்கள் நல வாரிய அமைக்க வேண்டும். 

பிஎஃப் இஎஸ்ஐ பிடித்தம் செய்து பாதுகாப்பு பணி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது அப்போது முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசு  தொழிலாளர்கள் வேலைகள் பறிபோகும்  அவலநிலை உள்ளது, என கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது வழியாக வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் அவர்களை முற்றுகையிட்டு கோரிக்கை மனு வழங்கினர்.


- உடுமலை தமிழ குரல் செய்திகளுக்காக.ஜெ வைர பிரகாஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad