உடுமலை நகராட்சியில் தினசரி சந்தைக்கு உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து ஏலம் முறையில் விற்பனை செய்து வருகின்றனர், கேரளா மூணார் மறையூர் கொடைக்கானல் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் தக்காளியின் விலை அதிகரித்து நிலையில் ஒரு 14 கிலோ பெட்டிக்கொண்ட ரூபாய் 400 வரை விற்பனையானது தற்பொழுது ஒரு பெட்டி 220 வரை மட்டுமே விற்பனையாகிறது, வியாபாரிகள் கூறுகையில் தக்காளி வரது அதிகமாக வரும் நிலையில் பிற மாவட்டங்களிலும் தக்காளி வரத்து அதிகமாகி வர உள்ளது ஆகையால் உள்ளூர் சந்தை வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் பண்ணி வருகின்றனர். அதனால் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது எனக் கொள்முதல் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
- உடுமலை தமிழக குரல் செய்திக்காக ஜெ வைர பிரகாஷ்
No comments:
Post a Comment