திரும்பி வெளியே வந்து பார்த்த போது அவருடைய மோட்டார் சைக்கிள் காணவில்லை, அதிர்ச்சி அடைந்த அவர் குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், பட்டப்பகலில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டார்.
நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அடிப்படையில் இல்லாத நிலையில் இரண்டு பேர் ஓட்டி வந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, அந்த வாகனம் திருட்டு மோட்டார் வாகனம் என்பது தெரிய வந்தது மேலும், அவர்கள் இந்திரா வீதியை சேர்ந்த அருள்ராஜ் (38), ஜாகீர் உசேன் வீதியைச் சேர்ந்த பகவதி (27) என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த வாகனத்தை மீட்டனர், இவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தமிழககுரல் செய்திகளுக்காக உடுமலை ஜெ.வைர பிரகாஷ்.
No comments:
Post a Comment