திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-அருகே எம். ஜி. ஆர் நகர். இப் பகுதியில் சுமார் 200. க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு 12. மணியளவில் எம். ஜி. ஆர் நகரை சேர்ந்த வாலிபர்கள் புத்தாண்டை கொண்டாடினர். பிறகு தினத்தையெட்டி கரூர் மெயின் ரோட்டில் அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் என்ற வாசகத்தை எழுத அதே பகுதியை சேர்ந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தனுஷ் வயது 19 பெட்ரோல் பங்க் ஊழியர் ஜீவானந்தம் வயது 19 மற்றும் பள்ளி மாணவன் கவினேஷ் வயது14 ஆகிய மூன்று பேர்கள் தாராபுரம் -கரூர் மெயின் ரோட்டில் வெள்ளை சுண்ணாம்பு கொண்டு வரைந்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று தாராபுரத்தில் இருந்து மூலனூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் கண் இமைக்கும் மூன்று பேர்கள் மீது மோதி விட்டு கார் நிற்காமல் சென்றது. அதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்குள்ள மக்கள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து படுகாயமடைந்த மூவரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிக்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் கல்லூரி மாணவர் தனுஷ் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தார். மேலும் இருவர் படுகாயடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் எம். ஜி. ஆர் நகரே சோகத்தில் மூழ்கியது.
No comments:
Post a Comment