திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் பொங்கு பாளையத்தை சேர்ந்த ஒருநபர் பைசா ஹோம் லோன் ஆப் மூலம் பணம் பெற்று திருப்பி செலுத்திய பின்னரும் வெளிநாட்டு நான்கு லோன் ஆப் மூலம் அதிக பணம் பெற்றதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பி தொடர்ந்து அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பி மிரட்டல் விட்டதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணசாமி அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சித்ராதேவி தலைமையில் தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் காதர் பேட்டையில் பதுங்கி இருந்ததாக கண்டறிந்து முகமது ஆஸ்கர் முகமது ஷாபி முகமது சலீம் அனீஸ் மோன் அஷ்ரப் ஆகிய குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து இந்த குற்றச்செயலுக்கு பயன்படுத்திய லேப்டாப் கம்ப்யூட்டர் சிம் கார்டு மற்றும் மின்னணு பொருட்களை கைப்பற்றினார்கள்.
இதனால் முன்பின் தெரியாத ஆப்புகளை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துவதை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தினர்

No comments:
Post a Comment