திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி வனப்பகுதி அருகே கோபாலபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் ஒற்றை காட்டு யானை ஊருக்குள் நுழைந்து அங்கு உள்ள விவசாய பூமியில் பயிரிடப்பட்ட வாழைகள் தென்னைகள் சேதம் செய்தன தகவல் தெரிந்த அமராவதி வனத்துறையினர் அங்கு விரைந்து ஒற்றை காட்டு யானையை வனத்திற்குள் அனுப்பினர்.
மேலும் ஒற்றைக்காட்டு யானை ஊருக்குள் இரவு நேரத்தில் அடிக்கடி வருகை தருவதால் இன்று வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யானை வராமல் இருக்க பல வனத்துறையினர் பாதுகாப்பில்ஈடுபட்டுள்ளனர்.
- உடுமலை தமிழக குரல் செய்திக்காக ஜெ வைர பிரகாஷ்
No comments:
Post a Comment