இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பான காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரின் கேடயமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றது, இந்த நிலையில் 2021- 2022 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே சட்டம் ஒழுங்கு குற்ற வழக்குகள் களவு சொத்துக்கள் மீட்பு என 95% வழக்குகளை முடித்து தமிழகத்தின் தலைசிறந்த காவல் நிலையமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது ஜனவரி 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் அவர்களிடம் முதல் பரிசுக்கான கோப்பையை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிலையில் பரிசு கோப்பையுடன் திருப்பூருக்கு வருகை தந்த வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் அவர்களுக்கு உடன் பணிபுரியும் அதிகாரிகள் காவலர்கள் பெரும் உற்சாகத்துடன் மலர் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தி யும் வரவேற்பு அளித்தனர்.
No comments:
Post a Comment