உடுமலையில் பணிக்கு வந்த உத்திரபிரதேசத்தை சார்ந்த தானிஷ் (வயது 20) எனபவர் நேற்று நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். அவருக்கு தாய், தந்தை மற்றும் மூன்று தங்கைகள் உள்ளனர் அவரது இறப்பு குறித்து அவர்கள் குடும்பத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துடித்து போன அந்த குடும்பத்தினர் எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பையே இழந்துவிட்டதாக கூறி வருந்தினர் இறுதியாக ஒரே ஒரு முறை எங்கள் மகனின் முகத்தையாவது பார்க்க ஆசைப்படுகிறோம் என கண்ணீர் மல்க உடுமலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று மாவட்ட தலைவர் அப்துல் கய்யூம் அவர்களின் ஏற்பாட்டின் படி உடுமலை தமுமுக ஆம்புலன்ஸ் இல் அவரது உடல் சென்னை வரை எடுத்து செல்லப்பட்டு பிறகு விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு செல்கிறது இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment