திருப்பூரில் நாம் தமிழர் கட்சி வீர தமிழர் முன்னணி சார்பில் வருடம் தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு திருமுருகப் பெருவிழா நடைபெற்று வரும் நிலையில் தற்போது பன்னிரண்டாம் ஆண்டு திருமுருகப் பெருவிழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையத்தில் (பி என் ரோடு) வரும் 5/2/2023 அன்று நடைபெற உள்ளதால் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ் தொகுதி தலைவர் திருமூர்த்தி, வீரத்தமிழர் முன்னணி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன், வீரத்தமிழர் முன்னணி திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளர் அருணாச்சலம், தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் தம்பி பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment