திருப்பூர் பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 31 12 20 22 அன்று முடிவடைந்ததை தொடர்ந்து புதிய கூலி உயர்வு ஒப்பந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை நேற்று (24-1-2022) எவர்சில்வர் பாத்திர பட்டறைதாரர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் அனைத்து பாத்திர தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் அதன் தலைவர் நா. வேலுச்சாமி (LPF) செயலாளர் கே. ரங்கராஜ் (CITU) பொருளாளர் தேவராஜ் (ATP) மற்றும் மு. ரத்தினசாமி (LPF) குப்புசாமி (CITU) செல்வராஜ், நாகராஜ் (AITUC) பாண்டியராஜ், (HMS) கணேசன் (INTUC) சீனிவாசன், லட்சுமி நாராயணன் ( BMS ) முத்துகிருஷ்ணன், அர்ஜுனன் (காமாட்சியம்மன் பாத்திர சங்கம்) ஆகியோரும் எவர்சில்வர் பட்டறை தாரர்கள் சார்பில் தலைவர் துரைசாமி துணைத்தலைவர் குமாரசாமி துணை செயலாளர் மதிவாணன் ஆகியோரும் பித்தளை செம்பு பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் செயலாளர் முத்தையா பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தையை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும் அதுவரை பழைய ஒப்பந்த கூலியை தொடர்ந்து வழங்கப்படும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர் இதனை ஆட்சசேபித்து ஏற்றுக் கொள்ளாத தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்களின் தற்போதைய நிலை விலைவாசி உயர்வு பல்வேறு காரணங்களால் கூலி உயர்வு அவசியம் என்று விவரங்கள் கூறினர் மேலும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவது என்று அனைத்து தரப்பினரால் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment