மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் விதமாக வருடம் தோறும் திமுகழகம் சார்பில் தமிழகம் எங்கும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் அந்த வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 25-1- 2023 அன்று மாலை 6 மணிக்கு தாராபுரம் சாலை பெருச்சி பாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் திமுக கழக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான செல்வராஜ் எம்எல்ஏ திமுக தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி ஆனந்தன் திருப்பூர் தெற்கு மாநகர கழக செயலாளரும், மாநில தொமுச பேரவை துணை செயலாளருமான டி கே டி மு நாகராசன், திருப்பூர் மாநகர மேயர் என் தினேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக உடன்பிறப்புகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாநகர கழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment