திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கோட்டைமேடு உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் கொடி ஏற்ற விழாவில் கலந்துகொண்டு பின்னர் கோட்டைமேட்டில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து தைத்திருநாளை முன்னிட்டு உழவர் தினத்தன்று கோட்டைமேடு பகுதியில் பொங்கல் விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக NA. திருநாவுக்கரசு.,B.S.c.,

No comments:
Post a Comment