திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டில் கோகுலம் காலணியிலிருந்து கலைவாணி தியேட்டர் செல்லும் சாலையில் சாக்கடை மூடாமல் இருப்பதால் அதன் வழியே வரும் இருசக்கர வாகனங்கள் தவறி அந்த பெரிய சாக்கடைக்குள் விழும் அபாயம் உள்ளது.
மேலும் நடந்து செல்வோர் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்றால் இந்த சாக்கடைக்குள் தான் விழ வேண்டும் ஆகவே இந்த பாலத்தின் ஓரத்தில் தடுப்புச் சுவர் கட்டி விபத்துக்கள் நடைபெறாமல் தடுத்திட ஒன்னாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் மற்றும் 14வது வார்டு செயலாளர் மு. ரத்தினசாமி வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம் எஸ் மணி வேலம்பாளையம் பகுதி செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.
No comments:
Post a Comment