திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருப்பூர் தெற்கு MLA முன்னிலையில் நடைபெற்றது! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருப்பூர் தெற்கு MLA முன்னிலையில் நடைபெற்றது!


திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பின் அதன் செயற்குழு கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில், முரசொலி மாறன் வளாகத்தில் மாவட்ட அவைத்தலைவர்  நடராஜன் அவர்கள் தலைமையிலும், மாவட்ட கழக செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் M.L.A., அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. 

இதில் வடக்கு மாநகர செயலாளரும் திருப்பூர் மாநகர மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும், மாவட்ட துணை செயலாளர்கள் நந்தினி, பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், மாநகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழக்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


மேலும் கழகத்திற்காக பாடுபட்ட கழகத்தின் மூத்த முன்னோடிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பொற்கிழி வழங்கப்படுமென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறைந்த பட்சம் 6 உறுப்பினர் அட்டைகளை வைத்திருப்போர் மாவட்ட கழகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கழக செயலாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad