இதுகுறித்து ஊர் பொதுமக்கள் தெரிவிக்கையில்: கடந்த ஆறு மாதத்தில் கொளத்துப்பாளையம் கிராமத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் தொழில் அதிபரின் வீட்டில் நகை மற்றும் ரொக்கம் வட மாநில தொழிலாளர்களால் திருடப்பட்டது அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பேரூராட்சி துணைத் தலைவர் கே. கே. மீசை துரைசாமி வீட்டில் ஏழு பவுன் நகை மற்றும் ரொக்க பணம் திருட்டு போனது கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் வடமாநிலத்தவர் அடிக்கடி வாகனங்களில் வந்து செல்வதாலும் விலை உயர்ந்த நாய், கோழி, ஆடு மற்றும் தானிய பொருட்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதனை தடுக்கும் விதத்திலும் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க எங்கள் கிராமப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக ஊர் பொதுமக்கள் சார்பில் 3, லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மேலும் அரசு பொது நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் பணம் பெற்று தற்போது 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கரூர் மெயின் ரோட்டில் இருந்து பள்ளிவாசல் தெரு, ஆலமரவீதி, நடுவீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேமரா பொருத்தப்பட உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி தலைவர் மற்றும் திமுகவினர் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment