காடுவெட்டி குரு என்று அழைக்கப்படும் செ. குருநாதன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவர் களில் ஒருவராகவும் மாநில வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார் இவரது மறைவு பாமக மற்றும் வன்னியர் சங்கத்திற்கு பேரிழப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது 62ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை நகர பகுதியில் வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில் குமார் தலைமையில் வன்னியர் சங்கம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட காடுவெட்டி செ. குருவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உடுமலை நகர பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment