திருப்பூரில் தார் சாலை குழிகளில் விழுந்து எழுந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் கோரிக்கை! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 February 2023

திருப்பூரில் தார் சாலை குழிகளில் விழுந்து எழுந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் கோரிக்கை!

திருப்பூர் அவிநாசி சாலைகளில் இருசக்கர வாகனம் ஓட்டிகளை உயிர் பலி வாங்க காத்திருக்கும் குழிகள்  திருப்பூர் புஷ்பா தியேட்டர் நிறுத்தத்தில் இருந்து அவிநாசி வரை உள்ள தார் ரோட்டில் இருபுறமும் சுமார் ஒரு அடி அளவுள்ள பள்ளங்கள் நிறைய உள்ளன இதோ அந்த லிஸ்ட், பங்களா பேருந்து நிறுத்தம், குமார் நகர், தீயணைப்பு நிலையம் முன்பு மற்றும் எதிரில், மாவட்ட ஆட்சியர் இல்லம் எதிர்ப்புறம், காந்திநகர் பெரியார் காலனி கருப்பராயன் கோயில் எதிர்புறம் தண்ணீர் பந்தல் மேலும் பல இடங்களில் தார் சாலை உடைந்து குழிகளாக உள்ளது இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது.

இதனால் உயிர் பலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது  நெடுஞ்சாலை துறையினர் சாலைகளை கண்காணிப்பு செய்வது இல்லை சிறிய, பெரிய, பள்ளங்களை சரி செய்வதுமில்லை இந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  குழிகளில் விழுந்து எழுந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad