தெருவோரங்களில் மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவர்களை கடை வைக்க அனுமதிப்பது ஏன் எனவே அவர்களுக்கு என ஒரு இடத்தை மாநகராட்சியில் ஒதுக்கீடு செய்து அங்கு அவர்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும் அனுமதி இன்றி இயங்கும் தெருவோர கடைகளை அகற்றி வியாபாரிகள் மற்றும் எங்கள் கடை வியாபாரத்தையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் இதற்கு நடவடிக்கை இல்லையெனில் மாவட்டம் முழுவதும் கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் மாநகராட்சி முன்பு நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மண்டல பொது செயலாளர் காட்டன் சக்திவேல், மண்டல பொருளாளர் சீனிவாசன், துணைத் தலைவர் மாரிராஜன், துணை செயலாளர் ராமர், மகளிர் அணி தலைவி ஆனந்தி, செயலாளர் காட்டன் சித்ரா, துணைத் தலைவி செல்லாத்தாள், துணை செயலாளர் ஸ்டுடியோ கவிதா, இளைஞர் அணி தலைவர் வெங்காயம் மணி ,செயலாளர் கண்ணன், ஆத்துப்பாளையம் பகுதி செயலாளர் ஏர்னஸ்ட்பால், கோபி மற்றும் உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment