மேலும் பிற மாநில தொழிலாளர்களுக்கு குறை மற்றும் புகார்கள் ஏதேனும் இருப்பின் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைவராக கொண்ட புலம் பெயர் தொழிலாளர்கள் குறை களைவு குழு மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பிற மாநில தொழிலாளர்கள் தங்களது குறைகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பிரிவில் இலவச எண் 1077 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் தொலைபேசி எண் 0421-2203313 & 0421-2244500 மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி எண் 0421-2970017- 9498101320 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்து வருகின்றனர் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது எனவே வதந்தியாக பரவும் வீடியோக்களை பிற மாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினித் தலைமையில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தொழிற்சாலை மேலாளர்கள், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினித் தெரிவித்ததாவது திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதன் காரணமாக திருப்பூரில் இருந்து வெளியேறி வருவதாகவும் whatsapp மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன அவை அனைத்தும் தீய நோக்கத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளாகும் திருப்பூர் மாவட்டமானது அனைத்து சமூக மக்களும் எந்தவித பகையும் இன்றி அமைதியான முறையில் வாழ்ந்து வரும் நன் மாவட்டமாகும் இதுவரை ஜாதி மொழி மற்றும் இனப் பிரச்சினைகள் எதுவும் நடைபெறாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான துரித நடவடிக்கை மேற்கொண்டு சட்டம் மற்றும் பொது அமைதியினை பராமரித்து வருகிறது.
No comments:
Post a Comment