காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த வேலை வாய்ப்பு திருவிழாவில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது திருப்பூர் ஈரோடு கோவை சென்னை போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. வேலை தேடுபவர்கள் தாங்கள் விபரங்களை உரிய கல்விச் சான்றுகள், புகைப்படம், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் திருவிழாவில் பங்கேற்கலாம்.
முன்பதிவு செய்ய https://tirupurjopfair.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பிளஸ் 2 தேர்ச்சி பட்டதாரிகள் பட்டய படிப்பு முடித்தவர்கள் ஐடிஐ தொழில்கல்வி பெற்றவர்கள் செவிலியர்கள் பொறியியல் பட்டம் ஆசிரியர்கள் ,கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், காவலாளி என பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது அனைவருக்கும் அனுமதி இலவசம் இது பற்றி மேயர் என். தினேஷ்குமார் அவர்கள் 34) துறைகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் இந்த வேலை வாய்ப்பு திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
தற்போது வரை 25 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க தயாராக உள்ளது படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது ஒரு லட்சம் பேர் இந்த வேலை வாய்ப்பு திருவிழாவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றார் அப்போது ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment